அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள்…
துணுக்குகள்
உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவராக ஆராதனா மிஸ்ரா மோனா நியமிக்கப்பட்டார். இவர் ராம்பூர் காஸ் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இரு மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் சிறு காணொளி போடுவதில் மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பு ஆதரவு மாணவர்களும் விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பேரூந்து நிலையதில் மோதிக் கொண்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம்செதுக்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து யானைத் தந்தங்களை விற்க முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் பிடித்தனர்.
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் நீடிக்கும் நிலையில், டிரம்பின் அழைப்பின் பேரில் ஜி ஜின்பிங் செப்டம்பர் 23ஆம் தேதி வாஷிங்டனுக்கு அரசு முறைப்பயணமாக சென்றார். மூன்று நாள் பயணத்தின் முக்கிய கட்டமாக, அவர் டிரம்பை சந்தித்து ஈரான் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை காலை, லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளிக்குள் நுழைந்த இளைஞன் ஒருவன், அங்கு பணியாற்றிய ஆசிரியரை சுட்டுக் கொன்றதோடு, பின்னர் தன்னையே குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தி உயிரிழந்தான்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முழு வீச்சில் முன்னேறி வருகிறது என்று மைக்ரோசாஃட் நிறுவன தலைமை செயல் அலுவலர் திரு. சத்ய நாதெல்லா கூறினார்.