அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை – தவெகவில் இணைந்தார்
1 அக்டோபர் 2026 07:00 இந்திய நேரம்
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, இன்று (செப் 30, 2026) தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
கட்சிக் கொடியை அணிவித்து விஜய் அவரை வரவேற்றார்.
- 1980ம் ஆண்டு தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
- 1984, 2001, 2016ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டசபை உறுப்பினராகவும், 2009ல் சேலம் லோக்சபா தொகுதியில் எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டவர்.
- கடந்த மே மாதம் உட்கட்சி பூசலால் அதிமுகவிலிருந்து விலகியதாக அறிவித்தார். அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், இன்று விஜயுடன் மேடையில் தோன்றிய செம்மலை, தவெகக் கொடியை ஏற்று புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
இந்தச் செய்தியைக் கேட்க, பிளே () பொத்தானை அழுத்தவும்.




