உ.பி. மாநில வழக்கறிஞர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

உ.பி. மாநில வழக்கறிஞர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை

14 செப்டம்பர் 2026 22:29 இந்திய நேரம்

உ.பி. மாநில வழக்கறிஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பணமில்லா மருத்துவ சிகிச்சை வசதியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்து கூறியதாவது:

  • பொதுமக்களின் நம்பிக்கையே நீதித்துறையின் மிகப்பெரிய பலம்.
  • வலுவான வழக்கறிஞர் சமூகம் மற்றும் நீதித்துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதி கிடைக்கும்.
  • குற்றமற்றவர்களுக்கு அச்சமில்லாமல், குற்றவாளிகள் தப்பிக்க முடியாத, அனைவருக்கும் சமமாக நீதி கிடைக்கும் அமைப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம்.

அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், வழக்கறிஞர் நல நிதி தொகையை 1.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாகவும், உயர் நீதிமன்றம் முன்மொழியும் எந்த நலத் திட்டத்திற்கும் அரசு முழு ஆதரவு தரும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இளம் வழக்கறிஞர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், நீதித்துறையை வலுப்படுத்தவும், பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் பாடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தச் செய்தியைக் கேட்க, பிளே () பொத்தானை அழுத்தவும்.