நர்மதா-தவா சங்கமத்தில் உலகப் புகழ்பெற்ற திருவிழா
10 நவம்பர் 2026 21:00 இந்திய நேரம்
நவம்பர் 22 முதல் 26 வரை நடைபெறுகிறது; 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பு
மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள பண்ட்ரபான் சங்கமப் பகுதியில், உலகப் புகழ்பெற்ற கார்த்திகை பௌர்ணமி திருவிழா நவம்பர் 22 முதல் 26 வரை நடைபெற உள்ளது.
நர்மதா மற்றும் தவா நதிகள் சங்கமிக்கும் இந்தப் புனிதத் தலம், 200 ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிக பாரம்பரியத்தை கொண்டதாகக் கருதப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமி நாளில் இங்கு நீராடினால் குடும்பத்தில் அமைதி, செழிப்பு மற்றும் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பண்ட்ரபான் சங்கமத்தில் திரளுகின்றனர். இதையொட்டி நடைபெறும் திருவிழா, மாநிலத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டைய விழாவை முன்னிட்டு 500 தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இட்டார்சி சந்திப்பு, நர்மதாபுரம் மற்றும் புத்னி ரயில் நிலையங்கள் வழியாக பக்தர்கள் திருவிழா நடைபெறும் இடத்தை எளிதில் அடைய முடியும்.
திருவிழாவை முன்னிட்டு பண்ட்ரபான் பகுதி பக்தர்களின் வருகையால் விழாக்கோலம் பூணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் செய்தியைக் கேட்க, பிளே () பொத்தானை அழுத்தவும்.


