BMC ஆணையருக்கு அவமதிப்பு நோட்டீஸ்; ஆக்கிரமிப்பு அகற்றத் தவறிய அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிருப்தி
10 நவம்பர் 2026 13:41 இந்திய நேரம்
மும்பையில் BEST பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது தொடர்பாக, மும்பை மாநகராட்சி (BMC) ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, ஆணையருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விசாரணையின் போது, ஆக்கிரமிப்பாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கேள்வியை எழுப்பிய நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. “தேவைப்பட்டால் அவர்களைச் சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம்” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடுமையாகக் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியைக் கேட்க, பிளே () பொத்தானை அழுத்தவும்.











