அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டமில்லை – ஈரான் அதிபர் உறுதி
27 செப்டம்பர் 2026 07:00 இந்திய நேரம்
ஈரான் எந்தவித அணு ஆயுதத் திட்டமும் மேற்கொள்ளவில்லை என்றும், சர்வதேச ஆய்வாளர்கள் வந்து தங்கள் அணுசக்தி நிலையங்களைச் சோதிக்க அனுமதி வழங்கியுள்ளதாக அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
“எங்கள் மதத் தீர்ப்பின்படி அணு ஆயுதம் சட்டவிரோதமானது. எங்களுக்கு அதனை உருவாக்கும் எந்த திட்டமும் இல்லை.”
“அணு ஆயுதப் பரவலைத் தடுக்க, யுரேனியம் செறிவூட்டலைக் குறைக்க தயாராக உள்ளோம். சர்வதேச ஆய்வாளர்கள் எங்கள் நிலையங்களைச் சோதிக்கலாம்.”
மேற்காசியாவில் நடைபெறும் மோதல்களுக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும், பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை டிரம்ப் அரசு மதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது,” எனவும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியைக் கேட்க, பிளே () பொத்தானை அழுத்தவும்.





